Offline
Menu
பத்து லாயாங் தீவு அருகே கடலில் விழுந்து மாயமான மீனவர் சடலமாகக் கண்டெடுப்பு
By Administrator
Published on 09/14/2026 13:00
News

பெர்லிஸ், சுங்கை பாருவில் உள்ள பூலாவ் பத்து லாயாங் தீவு அருகே நேற்று மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது கடலில் விழுந்து காணாமல் போன மீனவரின் உடல், அத்தீவிலிருந்து சுமார் 400 மீட்டர் தொலைவில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டது.

 

உயிரிழந்தவர் 33 வயதான கைருல் அமீர் பாஹ்ரூம் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

நேற்று அதிகாலை 3.30 மணியளவில் தனது அண்ணனுடன் மீன்பிடிக்கச் சென்றிருந்தபோது அவர் கடலில் விழுந்து மாயமானார்.

 

இந்த நிலையில் மீனவர்கள் உடலைக் கண்டுபிடித்து, தேடுதல் மற்றும் மீட்புக் குழுவிற்குத் தகவல் அளித்ததாக கோலா பெர்லிஸ் மலேசிய கடல்சார் அமலாக்க முகமையின் மண்டல இயக்குநர் நக் ரோங் தெரிவித்தார்.

 

தகவலறிந்த மீட்புக் குழுவினர் ‘போட் பெந்தெங் 1207’ படகு மூலம் உடலை மீட்டு, மேலதிக நடவடிக்கைகளுக்காகக் காவல் துறையிடம் ஒப்படைத்தனர்.

 

சடலம் பிரேதப் பரிசோதனைக்காக துவாங்கு பௌசியா மருத்துவமனையின் (Hospital Tuanku Fauziah) தடயவியல் பிரிவுக்கு அனுப்பப்படும் என கங்கார் மாவட்டக் காவல் துறைத் தலைவர் ஏசிபி யுஷாரிஃபுதீன் முகமது யூசோப் உறுதிப்படுத்தினார்.

Comments