Offline
Menu
காருக்குள் ஆண், பெண் சடலங்கள் கண்டெடுப்பு!
By Administrator
Published on 09/21/2026 13:00
News

மலாக்கா:

தாமான் இநாங் சாரி ,டுரியான் துங்கால் பகுதியில் இன்று அதிகாலை காரொன்றுக்குள் உள்ளூர் ஆண் மற்றும் பெண் என இருவரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

 

ஆதாரங்களின்படி, 34 வயதுடைய ஆணும், 31 வயதுடைய பெண்ணும் அதிகாலை சுமார் 3 மணியளவில் சடலங்களாகக் கண்டறியப்பட்டதாகவும், பின்னர் இந்தச் சம்பவம் அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

 

இதுவரை, உயிரிழந்த இருவரின் அடையாளம், மரணத்திற்கான காரணம் மற்றும் அவர்கள் காருக்குள் சடலங்களாகக் கண்டெடுக்கப்பட்டதற்கான சூழ்நிலைகள் குறித்து காவல்துறை தரப்பில் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.

 

பிரேதப் பரிசோதனைக்காக அலோர்காஜா மருத்துவமனைக்கு சடலம் கொண்டுச் செல்லப்பட்டுள்ளது.

Comments