Offline
Menu
பெக்கான் நானாஸில் திடீர் வெள்ளப்பெருக்கு
By Administrator
Published on 09/23/2026 15:00
News
20 வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்து பொதுமக்கள் அவதி!

ஜோகூர், பொந்தியான் அருகிலுள்ள பெக்கான் நானாஸ், கம்போங் பாரிட் பசீர் பகுதியில் இன்று பிற்பகல் 3.10 மணியளவில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சுமார் 20 வீடுகள் பாதிக்கப்பட்டடன.

 

பொந்தியான் மாவட்ட பேரிடர் மேலாண்மைக் குழுவின் (JPBD) செயலகம் வெளியிட்ட அறிக்கையின்படி, கம்போங் பாரிட் பசீர் தவிர, கனமழை காரணமாகத் தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கியதால் மேலும் சில பகுதிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

 

“கம்போங் பாரிட் பசீர் பகுதியில் எக்ஸ்கவேட்டர் (JCB) இயந்திரத்தைப் பயன்படுத்தித் தடைகள் அகற்றி, அடைபட்டிருந்த நீர் வழிப்பாதை உடனடியாகத் திறந்து விடப்பட்டது. இதனால் வெள்ள நீர் வேகமாக வடியத் தொடங்கியதால் நீர் மட்டம் பதிவு செய்யப்படவில்லை.” என்று பொந்தியான் மாவட்ட பேரிடர் மேலாண்மைக் குழு தெரிவித்தது.

 

வெள்ள நீர் வடியத் தொடங்கியதைத் தொடர்ந்து, இதுவரை தற்காலிக நிவாரண மையங்கள் (PPS) எதுவும் திறக்கப்படவில்லை என அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இருப்பினும், பொந்தியான் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்னும் மேகமூட்டமான வானிலையே நிலவி வருவதால், நிலவரம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. அபாயகரமான பகுதிகளில் உள்ள பொதுமக்கள் எச்சரிக்கையுடனும், நீர் மட்டம் உயரும் பட்சத்தில் தற்போதைய நிலவரங்களை உடனுக்குடன் பின்தொடருமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Comments