Offline
Menu
பார்வையாளர்களுக்கு 95 இலவச பேருந்துகளை இயக்குகிறது ‘ரபிட் கேஎல்’!
By Administrator
Published on 09/25/2026 13:30
News

சிப்பாங் அனைத்துலக சுற்றுப்பந்தயச் சுற்றில் (Sepang International Circuit) நடைபெறவுள்ள ‘ஃபார்முலா ஒன் கல்ஃப் ஏர் பாஹ்ரென் கிராண்ட் பிரீ’ (Formula 1 Gulf Air Bahrain Grand Prix) பந்தயத்தைப் பார்க்க வரும் பார்வையாளர்களின் வசதிக்காக, ‘ரபிட் கேஎல்’ (Rapid KL) நிறுவனம் இலவசப் பேருந்து சேவையை வழங்கவுள்ளது.

 

வரும் அக்டோபர் 2-ஆம் தேதி முதல் அக்டோபர் 4-ஆம் தேதி வரை நடைபெறும் இப்போட்டி நாட்களில், பொதுமக்களின் போக்குவரத்தைச் சீரமைக்க மொத்தம் 95 பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.

 

KLIA டெர்மினல் 2-வின் லெவல் 1 பேருந்து மையம், மிட்சுய் கேஎல்ஐஏ பேருந்து மையம், அத்துடன் டெ-வில்லேஜ் ), பெர்சியாரான் மில்லேனியா 2, பண்டார் பாரு ஏன்ஸ்டெக் ஆகிய ஐந்து முக்கிய இடங்களில் இருந்து சிப்பாங் அனைத்துலக சுற்றுப்பந்தயத் திடலுக்கு இந்தப் பேருந்துகள் நேரடியாக இயக்கப்படும்.

 

“இப்போட்டி நாட்களில் காலை 7.00 மணி முதல் நள்ளிரவு வரை, ஒவ்வொரு 10 முதல் 15 நிமிட இடைவெளியில் பேருந்துகள் தொடர்ச்சியாக இயக்கப்படும். மேலும், பரந்த சுற்றுப்பந்தயத் திடலுக்குள்ளும் பார்வையாளர்கள் எளிதாகச் சென்று வரச் சிறப்புப் பேருந்து சேவைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன” என்று

 

போட்டி நாட்களில் வாகன நெரிசலைத் தவிர்க்கவும், சீரான பயணத்தை உறுதி செய்யவும் பொதுமக்கள் தங்களது பயணங்களை முன்கூட்டியே திட்டமிட்டு, களத்தில் இருக்கும் பணியாளர்களின் வழிகாட்டுதல்களையும் அறிவுறுத்தல்களையும் பின்பற்றுமாறு ரபிட் கேஎல் கேட்டுக்கொண்டுள்ளது.

Comments