Offline
Menu
பிரான்சில் வெடித்தது மாணவர்கள் போராட்டம்
By Administrator
Published on 10/04/2026 16:00
News
கல்வி வசதிகள் கோரி வன்முறை

பாரிஸ், பிரான்ஸ் நாட்டில் போதிய கல்வி வசதிகள் மற்றும் கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க கோரி, பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் தீவிரப் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். பல நகரங்களில் இந்த போராட்டம் போலீசாருக்கும் மாணவர்களுக்கும் இடையேயான கடும் வன்முறை மோதலாக உருவெடுத்துள்ளது.

 

மாணவர்கள் போராட்டம்

ஸ்ட்ராஸ்பர்க், லில்லி போன்ற முக்கிய நகரங்களில் திரண்ட நூற்றுக்கணக்கான முகமூடி அணிந்த மாணவர்கள், சாலைகளில் தடுப்புகளை அமைத்து குப்பை தொட்டிகளுக்குத் தீ வைத்தனர். கலவரத்தை கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர்.

 

கண்ணீர்ப்புகை குண்டு

அப்போது, போலீசார் தங்களை நோக்கி கொத்து கொத்தாக வீசிய கண்ணீர்ப்புகை குண்டுகளை, முகமூடி அணிந்த மாணவர் ஒருவர் சற்றும் அஞ்சாமல், காற்பந்து உதைப்பது போல் கால்களால் உதைத்துத் தள்ளிய புகைப்படம் மற்றும் வீடியோ காட்சிகள் வெளியாகி உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

 

பள்ளிகளுக்கு தீ வைப்பு

மார்சேய் மட்டுமின்றி, பாரிஸின் தெற்கு மற்றும் தென்கிழக்கு பகுதிகளில் உள்ள லியோனார்ட் டி வின்சி மற்றும் காஸ்டன்-பாசெலார்ட் ஆகிய உயர்நிலை பள்ளிகளின் நுழைவாயில்களும் தீ வைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளன. நாண்டஸ் மற்றும் ரூவென் நகரங்களிலும் பள்ளிகளில் தீ விபத்துகள் பதிவாகியுள்ளன.

 

தீயணைப்பு வாகனம்

பிரான்சின் இரண்டாவது பெரிய நகரமான மார்சேயில் உள்ள செயின்ட்-எக்ஸ்பெரி உயர்நிலைப் பள்ளி கட்டிடத்திற்கு மாணவர்கள் சிலர் தீ வைத்தனர். இந்த தீயை அணைப்பதற்காக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வாகனத்தை சூழ்ந்து கொண்ட வன்முறை கும்பல், தீயணைப்பு வீரர்களை மிரட்டி வாகனத்தை விட்டு விரட்டியடித்தது. பின்னர், அந்த தீயணைப்பு வாகனத்திற்கும் தீ வைத்து கொளுத்தியுள்ளது.

Comments