Offline
Menu
பள்ளியில் இரத்தக்காயங்களுடன் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட மாணவி
By Administrator
Published on 10/04/2026 18:00
News
16 வயது சிறுவனுக்கு 6 நாட்கள் விளக்கமறியல்

பத்து பஹாட் யோங் பெங் பகுதியில் அமைந்துள்ள ஒரு மேல்நிலைப் பள்ளியின் மண்டபத்தில் 16 வயது படிவம் 4 மாணவி ஒருவர், இரத்தக்காயங்களுடன் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அப்படுகொலையுடன் தொடர்புடையதாக நம்பப்படும் 16 வயது சிறுவனுக்கு 6 நாட்கள் போலீஸ் தடுப்புக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.

 

நேற்று சனிக்கிழமை (அக்டோபர் 03) மாலை யோங் பெங் பகுதியில் வைத்து ஜோகூர் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் மற்றும் பத்து பஹாட் போலீசார் இணைந்து 16 வயதுடைய குறித்த சந்தேகநபரை அதிரடியாகக் கைது செய்தனர்.

 

பாடசாலை மண்டபத்திற்குள் மாணவி ஒருவர் சுயநினைவின்றிக் காயங்களுடன் கிடப்பதாகக் கிடைக்கப்பட்ட தகவலின் பேரில், சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் தலையிலும் உடலிலும் பலத்த காயங்களுடன் கிடந்த மாணவி இறந்துவிட்டதை உறுதிசெய்தனர்.

 

பத்து பஹாட் மாவட்ட நீதிமன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 04) ஆஜர்படுத்தப்பட்ட சந்தேகநபரை, எதிர்வரும் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 09) வரை 6 நாட்களுக்குத் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

 

சந்தேகநபரிடமிருந்து கைபேசி, ஆடைகள் மற்றும் காலணிகள் ஆகியவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இக்கொலைக்கான காரணம் குறித்துப் போலீசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், பொதுமக்கள் இது குறித்து வீண் வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Comments