Offline
Menu
மலேசியாவிலிருந்து 10,000 சட்டவிரோதக் குடியேறிகள் தாயகம் திரும்பினர்
By Administrator
Published on 10/06/2026 14:00
News
மியன்மார் அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

மலேசியாவில் தங்கியிருந்த சுமார் 10,000 சட்டவிரோதக் குடியேறிகள் (PATI) இந்த ஆண்டில் தாயகம் திரும்பியுள்ளதாக மியன்மார் அரசு ஊடகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

 

நேற்றைய தினம் மலேசியாவிலிருந்து 1,476 பேரைக் சுமந்து வந்த பிரம்மாண்டக் கப்பல் தெற்கு யாங்கூன் துறைமுகத்தைச் சென்றடைந்தது. மலேசியாவால் அடையாளம் காணப்பட்டு மியன்மாரால் ஏற்றுக் கொள்ளப்பட்ட 5,000 பேரில் இவர்கள் முதற்கட்டப் பிரிவினர் ஆவர்.

 

“கடந்த ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான காலத்தில் மட்டும் 8,041 மியன்மார் பிரஜைகள் விமானங்கள் மூலம் தாயகம் அனுப்பப்பட்டுள்ளனர். தடுப்பு முகாம்களில் தகைக்கப்பட்டிருந்த இவர்கள் அனைவரும் தங்களின் சொந்த விருப்பத்தின் பேரில் தானாக முன்வந்தே தாயகம் திரும்ப ஒப்புக் கொண்டுள்ளனர்” என்று மியன்மார் அரசு நாளிதழான ‘தி குளோபல் நியூ லைட் ஆஃப் ‘ செய்தி வெளியாகியுள்ளது.

மியன்மாரில் சிறுபான்மையினராக உள்ள ரோஹிங்கியா மக்கள் அங்கே கொடூரமான அடக்குமுறைகளைச் சந்தித்து வரும் நிலையில், அவர்களும் மீண்டும் திருப்பி அனுப்பப்படுகிறார்களா எனப் பன்னாட்டு மனித உரிமைகள் அமைப்புகள் கவலை வெளியிட்டுள்ளன. இருப்பினும், எந்தெந்த இனத்தவர்கள் திருப்பி அனுப்பப்படுகிறார்கள் என்பது குறித்து மலேசியா எந்தக் கருத்துரையும் வழங்கவில்லை.

 

ஐக்கிய நாடுகள் சபையின் (UN) தரவுகளின்படி, மலேசியாவில் தஞ்சம் புகுந்துள்ள 1,90,000 மியான்மர் அகதிகள் மற்றும் தஞ்சம்கோருபவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் ரோஹிங்கியா இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments