கிள்ளான், கம்போங் காப்பார், ஜாலான் அகோப் பகுதியில் உள்ள மின்சாரக் கம்பம் ஒன்றுக்கு அடியில் இந்திய வம்சாவளி ஆடவர் எனச் சந்தேகிக்கப்படும் ஒருவரின் சடலம் இன்று (அக்டோபர் 04) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் மின்சாரக் கம்பத்தின் அடியில் உயிரிழந்த நிலையில் கிடந்தது தொடர்பில் காலை 10.02 மணிக்குச் சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைக்குத் தகவல் வழங்கப்பட்டது. இவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்திருக்கலாம் எனக் சந்தேகிக்கப்படுகிறது.
உயிரிழந்த நபரின் அடையாளமோ அல்லது அவரது வயதோ இதுவரை உறுதிசெய்யப்படவில்லை. சடலம் மேலதிக விசாரணைகளுக்காகப் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில்,அவர்கள் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.