Offline
Menu
கடப்பிதழைப் பயன்படுத்தி மோட்டார் சைக்கிள் கொள்முதல்
By Administrator
Published on 10/10/2026 14:00
News
ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனம் ஓட்டிய 13 வெளிநாட்டவர்கள் கைது!

கடப்பிதழைப் பயன்படுத்தி மோட்டார் சைக்கிள்களை வாங்கிவிட்டு, முறையான ஓட்டுநர் உரிமம் இன்றி வீதிகளில் வாகனங்களை ஓட்டிவந்த வெளிநாட்டவர்களை இலக்கு வைத்து சிலாங்கூர் சாலைப் போக்குவரத்துத் துறை (JPJ) நடத்திய அதிரடி சோதனையில் 51 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் 13 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

இன்று (அக்டோபர் 9, 2026) காலை 6:30 மணி முதல் சுமார் 4 மணி நேரம் ‘காப்பர்-மேரு’ தொழில்பேட்டைச் சாலையில் நடத்தப்பட்ட ‘ஒப்ஸ் பேவா’ (Ops Pewa) சோதனையின்போது, 47 மோட்டார் சைக்கிள்கள் உட்பட மொத்தம் 51 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

 

இதில் பங்களாதேசை சேர்ந்த 13 பேர், மியன்மார் நாட்டைச் சேர்ந்த 11 பேர், பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 10 பேர், இந்தியாவைச் சேர்ந்த 8 பேர், இந்தோனேசியாவைச் சேர்ந்த 7 பேர் மற்றும் ஏனைய நாடுகளைச் சேர்ந்த 2 பேர் என மொத்தம் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

கைது செய்யப்பட்டவர்கள் பழைய இரும்புகள் மற்றும் குப்பைகளைச் சேகரிக்கும் பணிகளுக்காக இந்த வாகனங்களைப் பயன்படுத்தி வந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

கடப்பிதழைப் பயன்படுத்தி வாகனம் வாங்குவது குற்றமல்ல; ஆனால் ஓட்டுநர் உரிமம் இன்றி அதை வீதிகளில் இயக்குவதே சட்டவிரோதமானது” என்று சிலாங்கூர் JPJ இயக்குநர் டத்தோ அகமத் கமருசமான் முகமட் தெரிவித்தார்.

 

முறையான ஓட்டுநர் உரிமம் இல்லாத வெளிநாட்டு ஊழியர்களிடம் நிறுவனத்தின் வாகனங்களைக் கொடுத்து சரக்குகளை அனுப்ப வேண்டாம் என்றும், மீறும் முதலாளிகள் மீது நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.

 

சிலாங்கூர் மாநிலத்தில் கிள்ளான், அம்பாங், செலாயாங், சுபாங் ஜெயா மற்றும் பூச்சோங் ஆகிய பகுதிகள் ஓட்டுநர் உரிமமின்றி வெளிநாட்டவர்கள் அதிகளவில் வாகனங்களை இயக்கும் பகுதிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

Comments