Offline
Menu
மடானி அரசாங்கத்தின் மக்கள் நலன் காக்கும்
By Administrator
Published on 10/10/2026 14:00
News
பட்ஜெட் - யுனேஸ்வரன் பாராட்டு

மடானி அரசாங்கத்தின் கீழ் யாரும் பின்தங்கிவிட மாட்டார்கள் என்பதை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த 2027 பட்ஜெட் உறுதி செய்திருக்கிறது என்று தேசிய ஒற்றுமைத்துறை துணையமைச்சரும் சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினருமான யுனேஸ்வரன் தனது அறிக்கையில் தெரிவித்தார்.

 

குறைந்த வருமானம் பெறுவோர் முதல் நடுத்தர வருமானம் பெறுவோர் வரையிலும் குறைந்தபட்ச சம்பளம் பெறும் தொழிலாளர்கள் முதல் உயர்ந்த வருமானம் பெறக்கூடியவர்கள் வரை அனைவருக்கும் இந்த பட்ஜெட் நன்மை அளிக்கிறது. நாட்டின் செழிப்பை அனுபவிப்பதற்கான வாய்ப்பு அனைவருக்கும் கிடைக்கவேண்டியதுதான் நியாயம் என்று அவர் சொன்னார். அனைத்து இனத்தவரும் அனைத்து சமயத்தவரும் அனைத்து மாநிலத்தவரும் கவனிக்கப்பட வேண்டும்.

 

அவர்களின் நலன் பாதுகாக்கப்பட வேண்டும்.
அவர்களும் நியாயமான சமச்சீரான மேம்பாட்டை அனுபவிக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். மக்களின் நல்வாழ்வுக்கு 2027 பட்ஜெட் பக்கபலமாக இருக்கட்டும். வலுவான பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவாக இருக்கட்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

Comments