Offline
Menu
வாடகை கார், பேருந்து ஓட்டுநர்களுக்கு தலா RM1,000 ஒருமுறை உதவித்தொகை
By Administrator
Published on 10/10/2026 15:00
News
பிரதமர் அறிவிப்பு

நாடு முழுவதும் உள்ள வாடகைக் கார் மற்றும் பேருந்து ஓட்டுநர்களுக்கு அரசாங்கம் சார்பில் தலா 1,000 ரிங்கிட் ஒருமுறை (One-off) உதவித்தொகையாக வழங்கப்படவுள்ளது.

 

2027-ஆம் ஆண்டிற்கான தேசிய வரவு செலவுத் திட்டத்தை (Budget 2027) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து உரையாற்றிய பிரதமரும் நிதியமைச்சருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.

 

நாடு முழுவதும் உள்ள சுமார் 38,000 டாக்சி ஓட்டுநர்களும், 15,000 பேருந்து ஓட்டுநர்களும் இத்திட்டத்தின் மூலம் பயனடைவர் என்றும், இந்த நிதி உதவித்தொகை அடுத்த வாரம் நேரடியாக ஓட்டுநர்களுக்கு வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.

 

மலேசிய தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட சிறப்பு ‘H’ வாகனப் பதிவு எண் விற்பனை மூலம் கிடைத்த வருவாயைக் கொண்டே இந்த உதவி வழங்கப்படுகிறது. இந்த ‘H’ பதிவு எண் வரிசையின் ஏலம் மூலம் மொத்தம் 91.2 மில்லியன் ரிங்கிட் வருவாய் கிடைத்துள்ளது என்றும், இதில் ‘H 1’ என்ற விசேஷப் பதிவு எண் மட்டும் சாதனை அளவாக 1 கோடியே 7 லட்சத்து 77 ஆயிரத்து 777 ரிங்கிட்டுக்கு (RM10,777,777) ஏலம் போனது குறிப்பிடத்தக்கது.

 

போக்குவரத்துத் துறையைச் சார்ந்த பொதுச் சேவை வாகன ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தை ஊக்குவிக்கும் வகையில் இந்த உதவித்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments