Offline
Menu
ஜெர்மனி: அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து – இந்தியர்கள் 3 பேர் பலி
By Administrator
Published on 10/16/2026 13:00
News

பெர்லின், ஜெர்மனியில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் இந்தியர்கள் 3 பேர் உயிரிழந்தனர்.

ஐரோப்பாவில் அமைந்துள்ள நாடு ஜெர்மனி. அந்நாட்டின் வடக்கு ரிஹ்னி – வெஸ்ட் ஹலி மாநிலம் போஷம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது.

3 இந்தியர்கள் பலி
இந்த அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த இந்தியாவை சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் 2 பேர் பெண்கள் ஆவர். உயிரிழந்த 3 பேரில் 2 பெண்கள் 25 மற்றும் 27 வயதுடையவர்கள் ஆவர். ஆண் 26 வயதுடையவர்கள் ஆவர்.

உயிரிழந்த 3 பேரும் இந்தியர்கள் என்பது உறுதியான நிலையில் அவர்களின் சொந்த மாநிலம் எது?, உயிரிழந்தவர்களின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை. அதேவேளை, இந்த தீ விபத்தில் 5 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற தீயணைப்புத்துறையினர், அடுக்குமாடி குடியிருப்பில் பற்றி எரிந்த தீயை போராடி அணைத்தனர். மேலும், காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். உயிரிழந்த 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதேவேளை, இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த தீ விபத்து தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் ருமேனியா நாட்டை சேர்ந்த 41 வயதான நபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments