Offline
Menu
யோங் பெங் மாணவி கொல்லப்பட்ட சம்பவம்
By Administrator
Published on 10/16/2026 14:00
News
கொலைக் குற்றச்சாட்டை எதிர்கொள்ள நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட பதின்ம வயது சந்தேக நபர்

பத்து பஹாட்: யோங் பெங் பகுதியைச் சேர்ந்த, நான்காம் படிவம் பயிலும் மாணவி ஐரீன் சோஃபியா முகமது கைருல் ஃபைசலைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, 16 வயது சிறுவன் ஒருவன் பத்து பஹாட் நீதிமன்ற வளாகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளான். இந்தச் சந்தேக நபர் வியாழக்கிழமை (அக்டோபர் 15) காலை சுமார் 7 மணிக்கு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டதாகத் தெரிகிறது.

 

அவர் மீது தண்டனைச் சட்டத்தின் பிரிவு 302-ன் கீழ் கொலைக் குற்றம் சுமத்தப்பட உள்ளது. சந்தேக நபர் சிறார் என்பதால், ஊடகவியலாளர்கள் நீதிமன்ற அறைக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 3ஆம் தேதி மாலை சுமார் 5.30 மணியளவில், யோங் பெங்கில் உள்ள பள்ளி மண்டபம் ஒன்றில் மாணவி ஐரீன் சோஃபியா இரத்த வெள்ளத்தில் கண்டெடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட மாணவியின் தலையில் குழாய் ஒன்றைக் கொண்டு பலமுறை தாக்கப்பட்டிருக்கலாம் என்று ஜோகூர் மாநிலக் காவல் துறைத் தலைவர் டத்தோ அப்துல் ரஹமான் அர்ஸாத் தெரிவித்துள்ளார்.

Comments