Offline
Menu
ஆட்சியாளர்களின் 273ஆவது மாநாட்டின் இரண்டாம் நாளில் கலந்து கொண்ட சுல்தான் இப்ராஹிம்
By Administrator
Published on 10/17/2026 15:00
News

கோலாலம்பூர், மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், இஸ்தானா நெகாராவில் நடைபெற்ற ஆட்சியாளர்களின் 273ஆவது மாநாட்டின் இரண்டாம் நாள் கூட்டத்தில் இன்று கலந்து கொண்டார். பேராக் சுல்தான் சுல்தான் நஸ்ரின் ஷா தலைமையில் கூட்டம் நடைபெற்றது. மேலும் பெர்லிஸ் ராஜா, துவாங்கு சையத் சிராஜுதீன் ஜமாலுல்லைல்,  சிலாங்கூர் சுல்தான் சுல்தான் ஷராபுதீன் இட்ரிஸ் ஷா, கெடா சுல்தான் அல்-அமினுல் கரீம் சுல்தான் சல்லேஹுதீன் சுல்தான் பத்லிஷா, பகாங் சுல்தான், அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுதீன் அல்-முஸ்தபா பில்லா ஷா ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் திரெங்கானுவின் ரீஜண்ட் தெங்கு முஹம்மது இஸ்மாயில்; கிளந்தான் பட்டத்து இளவரசர் தெங்கு முஹம்மது ஃபக்ரி பெட்ரா; ஜோகூரின் துங்கு தெமெங்காங், துங்கு இட்ரிஸ் இஸ்கண்டார் சுல்தான் இப்ராஹிம் ஆகியோரும் நான்கு ஆளுநர்களான மலாக்காவை சேர்ந்த துன் டாக்டர் முகமட் அலி ருஸ்தம், சரவாக்கின் துன் டாக்டர் வான் ஜுனைடி துவாங்கு ஜாபர், சபாவின் துன் மூசா அமான் மற்றும் பினாங்கின் துன் ரம்லி நகா தாலிப் ஆகியோரும் கலந்து கொண்டனர். பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், மந்திரி பெசார், முதலமைச்சர்கள், சரவாக் துணைப் பிரதமர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Comments