Offline
Menu
அட்லாண்டிக் பெருங்கடலுக்கு எனது பெயரை சூட்ட சுந்தர்பிச்சை மறுத்து விட்டார்
By Administrator
Published on 10/25/2026 13:32
News

வாஷிங்டன், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், கூகுள் மேப்ஸில் அட்லாண்டிக் பெருங்கடலின் பெயரை ‘டிரம்ப் பெருங்கடல்’ (Trump Ocean) என மாற்ற யோசித்ததாகவும், அந்தக் கோரிக்கையைக் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை நிராகரித்ததாகவும் கூறியுள்ளார்.

 

அட்லாண்டிக்பெருங்கடலின் பெயரை மாற்றும் எண்ணத்தை, கூகுள் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சையின் அறிவுறுத்தலை அடுத்துக் கைவிட்டுவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

 

தெற்கு கரோலினாவில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றிய டொனால்டு டிரம்ப், ஒன்டா ரியோ ஏரியின் பெயரை அமெரிக்கஏரி என்று மாற்றுவதற்குக் காட்டிய ஆர்வத்தைத் தொடர்ந்து, பெருங்கடல்களின் பெயர்களையும் டிரம்ப் பெருங்கடல் என மாற்ற யோசித்ததாகத் தெரிவித்தார்.

 

இது தொடர்பாக கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான சுந்தர் பிச்சையிடம் ஆலோசனை நடத்தியதாகக் குறிப்பிட்ட அவர், பெருங்கடல்கள் பல நாடுகளை இணைப்பதால் அதன் பெயரை மாற்றுவது சர்வதேச அளவில் அதிருப்தியை ஏற்படுத்தும் என்று சுந்தர் பிச்சை எச்சரித்ததாகக் கூறினார்.

 

கூகுள் நிறுவனத்தலைவரின் இந்த விளக்கத்தை ஏற்றுக் கொண்டதால், அட்லாண்டிக் பெருங்கடலின் பெயரை மாற்றும் திட்டத்தை கைவிட்டுவிட்டதாக டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

 

தேர்தல் நெருங்கும் நேரத்தில், டிரம்ப்பின் பேச்சுகள் குறித்துச் சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் மீம்களாகத் தங்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

Comments