Offline
Menu
பள்ளி வளாகத்தில் பிளஸ் 2 மாணவி தீக்குளித்து தற்கொலை
By Administrator
Published on 10/25/2026 13:36
News
டெல்லியில் அதிர்ச்சி

டெல்லி, டெல்லியில் பள்ளி வளாகத்தில் பிளஸ் 2 மாணவி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

தலைநகர் டெல்லியின் ஷாஸ்தரா மாவட்டம் கிருஷ்ணா நகரில் பள்ளிக்கூடம் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 17 வயதான மாணவி பிளஸ் 2 படித்து வந்தார்.

 

தீக்குளித்து தற்கொலை
இந்நிலையில், மாணவி இன்று காலை வழக்கம்போல் பள்ளிக்கு வந்தார். அவர் காலை 11 மணியளவில் பள்ளி வளாகத்தில் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.

 

தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தீக்குளித்து தற்கொலை செய்வதற்குமுன் சிறுமி எழுதி வைத்த கடிதத்தையும் போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். பிளஸ் 2 மாணவி பள்ளி வளாகத்தில் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments