Offline
Menu
பினாங்கிலிருந்து ஹாங்காங் வந்த இரண்டாவது நபர் கொக்கைனுடன் கைது
By Administrator
Published on 10/27/2026 14:00
News

பினாங்கிலிருந்து ஹாங்காங் அனைத்துலக விமான நிலையத்திற்கு வந்த 39 வயது சீன நாட்டவர் ஒருவரை, அவரது கைப்பையில் 2.2 கிலோ கொக்கைன் வைத்திருந்ததற்காக ஹாங்காங் அதிகாரிகள் நேற்று கைது செய்தனர். இதற்கு முன்னதாக, வியாழக்கிழமை அன்று பினாங்கிலிருந்து விமானம் மூலம் வந்த 25 வயது சீன நாட்டவர் ஒருவர், 2 கிலோ கொக்கைனுடன் இதே விமான நிலையத்தில் பிடிபட்டிருந்தார். நேற்று கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் மதிப்பு சுமார் 1.3 மில்லியன் ஹாங்காங் டாலர்கள் (677,209 மலேசிய ரிங்கிட்) இருக்கும் என்று ஹாங்காங் சுங்க மற்றும் கலால் துறை தெரிவித்துள்ளதாக ‘பெரித்தா ஹாரியான்’  செய்தி வெளியிட்டுள்ளது.

 

கைது செய்யப்பட்ட நபர் மீது போதைப்பொருள் விநியோகம் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகவும், இந்த வழக்கு இன்று வெஸ்ட் கவுலூன்  மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹாங்காங் சட்டப்படி, போதைப்பொருள் விநியோகக் குற்றத்தில் ஒருவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அவருக்கு ஆயுள் தண்டனையும், 5 மில்லியன் ஹாங்காங் டாலர்கள் (2.6 மில்லியன் மலேசிய ரிங்கிட்) அபராதமும் விதிக்கப்படலாம்.

Comments