Offline
Menu
செர்பியாவில் ஆட்சியைக் கைப்பற்றிய மாணவர் இயக்கம்
By Administrator
Published on 10/28/2026 14:00
News

செர்பியா, செர்பியாவில் 14 ஆண்டுகள் அதிபராக இருந்த அலெக்சாண்டர் வுசிக்-ஐ தோற்கடித்து மாணவர் அமைப்பு ஆட்சியை கைப்பற்றியுள்ளது. மாணவர்கள் நேரடியாக போட்டியிடாமல், மருத்துவர்கள், விஞ்ஞானிகள், ஆசிரியர்கள், நடிகர்கள், விளையாட்டு பிரபலங்கள் போன்ற அரசியல் அனுபவமே இல்லாதவர்களை வேட்பாளர்களாக நிறுத்தி மாபெரும் வெற்றி கண்டுள்ளனர்.

 

ஊழலுக்கு எதிராக கடந்த 2 ஆண்டுகளாக போராட்டங்களை நடத்திய கல்லூரி மாணவர்கள், ‘ஸ்டூடண்ட் லிஸ்ட்’ (Students List) என்ற இயக்கத்தை உருவாக்கி பொதுத்தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. மொத்தமுள்ள 250 நாடாளுமன்ற இடங்களில், 140 இடங்களை வென்று மாணவர் இயக்கம் வரலாற்று சாதனை படைத்துள்ளது.

 

இதன் மூலம், கடந்த பத்தாண்டுகளாக செர்பிய அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வந்த அதிபர் அலெக்சாண்டர் வுசிக் தனது தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளார். ஐரோப்பா முழுவதும் ஊழல், விலைவாசி உயர்வு மற்றும் கல்வித் துறைப் புறக்கணிப்புக்கு எதிராக மாணவர்கள் போராடி வரும் நிலையில், இந்தத் தேர்தல் முடிவு உலகளவில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.

 

நேற்று வெளியான முதற்கட்ட தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, அதிபர் அலெக்சாண்டர் வுசிக் தனது தோல்வியை அதிகாரப்பூர்வமாகத் தொலைக்காட்சி வாயிலாக அறிவித்தார். அதிபர் வுசிக்கின் செர்பிய முற்போக்குக் கட்சி பெற்ற இடங்கள் 105 இடங்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தத் தேர்தலில் நாம் தோல்வியடைந்துள்ளது தெளிவாகத் தெரிகிறது, மாணவர் அமைப்பே வெற்றி பெற்றுள்ளது’ என்று வுசிக் உருக்கமாகத் தெரிவித்தார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து தலைநகர் பெல்கிரேட் வீதிகளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு வெற்றிக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.

 

கடந்த 2014 முதல் செர்பியாவின் பிரதமராகவும் அதிபராகவும் கோலோச்சிய வுசிக்கின் வீழ்ச்சிக்கு, கடந்த 2024-ஆம் ஆண்டு நோவி சாட் ரயில் நிலைய மேற்கூரை இடிந்து விழுந்து 16 பேர் பலியான சம்பவமே முக்கியக் காரணம். அரசின் ஊழல் மற்றும் அலட்சியத்தால் ஏற்பட்ட இந்த விபத்தைக் கண்டித்து, கடந்த இரண்டு ஆண்டுகளாக மாணவர்கள் தொடர் போராட்டங்களை நடத்தினர்.

 

இந்த வீதிப் போராட்டங்களின் எழுச்சியே, தற்போது ‘இலியா ஸ்ர்டானோவிக்’ தலைமையிலான 250 வேட்பாளர்களைக் கொண்ட கல்வியாளர்கள், நடிகர்கள், விவசாயிகள் உள்ளடக்கிய ‘ஸ்டூடண்ட் லிஸ்ட்’ அமைப்பாக உருவெடுத்து, இன்று நாடாளுமன்றத்தைக் கைப்பற்றியுள்ளது.

Comments