Offline
Menu
வீடமைப்பு, ஊராட்சித் துறை அமைச்சின் வரலாறு காணாத தீபாவளி விழா
By Administrator
Published on 10/28/2026 15:00
News

வீடமைப்ப, ஊராட்சித் துறை அமைச்சு, தனது வரலாற்றிலேயே மிகப்பெரிய தீபாவளி விழாவை ஏற்பாடு செய்துள்ளதாக அதன் அமைச்சர் ஙா கோர் மிங் தெரிவித்தார். புத்ராஜெயாவில் உள்ள அமைச்சின் கட்டடத்தில் இன்று நடைபெற்ற இவ்விழா, மலேசியாவின் பல்வேறு இன, சமய மக்களிடையே ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் வலுப்படுத்தும் நோக்கத்தைக் கொண்டுள்ளதாக அவர் கூறினார்.

 

இவ்விழாவில் மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். மக்கள் ஓசை நிர்வாக இயக்குநர் டத்தோ ச. கோபாலகிருஷ்ணன் உட்பட பல்வேறு பிரமுகர்களும் இவ்விழாவில் பங்கேற்றனர். இதுபோன்ற கொண்டாட்டங்கள் பிற இனங்களின் கலாசாரங்களைப் புரிந்துகொள்ளவும், தவறான புரிதல்களைக் குறைக்கவும், நட்புறவை வளர்க்கவும் உதவுகின்றன என்று ஙா கோர் மிங் தெரிவித்தார்.

 

நோன்புப் பெருநாள், சீனப் புத்தாண்டு, கிறிஸ்துமஸ் உள்ளிட்ட முக்கிய பண்டிகைகளையும் அமைச்சு கொண்டாடி வருவதாகக் குறிப்பிட்ட அவர், ஒற்றுமை என்பது வெறும் முழக்கமாக இல்லாமல், ஒருவருக்கொருவர் வேறுபாடுகளை மதிப்பதன் மூலம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினார். இந்தத் தீபாவளி விழா, அமைச்சின் ஊழியர்களிடையே நல்லுறவையும் ஒற்றுமையையும் மேலும் வலுப்படுத்தும் என நம்பிக்கை தெரிவித்தார்.

Comments