Offline
நாட்டின் பணவீக்கம் 2 விழுக்காடு அதிகரிப்பு
News
Published on 06/26/2024

மலேசியாவின் பணவீக்க விகிதம் கடந்த மே மாதம் அதிகரித்துள்ளது என்று தேசிய புள்ளியல் துறை தெரிவித்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதத்தில் பதிவான 1.8 விழுக்காட்டுடன் ஒப்பிடுகையில் மே மாதத்தில் நாட்டின் பண வீக்கம் 2.0 விழுக்காடாக அதிகரித்துள்ளது.

வீடுகள், நீர், மின்சாரம், எரிவாயு மற்றும் பிற எரிபொருட்களின் முக்கிய குழுக்களின் விலைகளில் 3.2 விழுக்காடு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் உணவகம் மற்றும் தங்குமிட சேவைகளில் மேலும் 3.2 விழுக்காடு அதிகரிப்பால் பண வீக்கம் அதிகரித்துள்ளது.

தென் கொரியா, இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸை விட மலேசியாவில் பணவீக்க விகிதம் குறைவாக இருப்பதாக தேசிய புள்ளியல் துறை தெரிவித்துள்ளது.

தென் கொரியாவின் பணவீக்க விகிதம் மே மாதத்தில் 2.7 விழுக்காடு குறைந்த அதிகரிப்பை பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments