Offline

LATEST NEWS

மாற்றத்திற்காக ரஜினியை சந்தித்த நடிகர் லாரன்ஸ்
Published on 06/26/2024 01:44
News

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகரான ராகவா லாரன்ஸ், தன் உதவும் குணத்தால் மக்கள் மத்தியில் தனக்கு என்று ஓர் நிலையான இடத்தை பிடித்துள்ளார். இதுவரையில் பலருக்கு தனிப்பட்ட முறையில் உதவிகள் செய்துவந்த நடிகர் லாரன்ஸ், சேவையே கடவுள் எனும் நோக்கத்தில் “மாற்றம்” என்ற பெயரில் புதிய அறக்கட்டளை ஒன்றைத் துவக்கியுள்ளார்.

இந்த அறக்கட்டளை மூலம் பலருக்கு உதவிகளை செய்து வருகிறார். இந்த அறக்கட்டளையில் முன்னணி நடிகர் எஸ் ஜே சூர்யா மற்றும் கலக்கப்போவது யாரு பாலா, செஃப் வினோத் , அறந்தாங்கி நிஷா ஆகியோர் இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு மாற்றுத்திறனாளி மாணவியான ஸ்வேதா, தனது படிப்பிற்கு உதவுமான வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இணையத்தில் இந்த வீடியோ டிரெண்டாகி அது ராகவா லாரன்ஸின் கண்ணில் பட, அந்த வீடியோவை லாரன்ஸ் தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்து  ஹாய் ஸ்வேதா… கவலைப்படாதே, இன்றிலிருந்து நீ என் சொந்த குழந்தை, நான் எப்போதும் உங்களுக்காக இருப்பேன், இரண்டு நாட்களில் உங்களை சந்திப்பேன் என பதிவிட்டுள்ளார். அவரின் இந்த பதிவானது இணையத்தில் டிரெண்டாகியது.

இந்நிலையில் ராகவா லாரன்ஸ் மாற்றம் அறக்கட்டளை சார்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து ஆசி பெற்றுள்ளார். இது குறித்து தனது எக்ஸ்தள பதிவில் கூறியிருப்பதாவது, தலைவர் சூப்பர் ஸ்டாரை மாற்றம் அறக்கட்டளைக்கு ஆசீர்வாதம் வாங்க சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி எனவும், குருவே சரணம் என சூப்பர் ஸ்டாருன் உள்ள புகைப்படத்தை வெளியிட்டு பதிவிட்டுள்ளார்.

Comments