கொரியன் ஏர் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் சியோலின் இன்சியோன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தைவானில் உள்ள டைசுங் சர்வதேச விமான நிலையத்திற்கு புறப்பட்டது. கடந்த ஜூன் 22 ஆம் தேதி, மாலை 4.45 மணிக்கு விமானம் புறப்பட்டது. விமானம் புறப்பட்ட 50 நிமிடங்களில் விமானத்தின் காற்றோட்டத்தை சீராக காற்றோட்டத்தை சீராக வைத்துக் கொள்ளும் பிரெஷரைசேஷன் சிஸ்டம் (pressurization system) என்ற இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக விமானம் விமானம் 15 நிமிடங்களில் 26,900 அடி கீழே சரிந்தது. நடுவானில் சென்று கொண்டிருந்த விமானம் திடீரென கீழே சரிந்ததால், அதில் பயணம் செய்தவர்கள் அலறினர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து பயணிகளுக்கு சுவாச கோளாறு ஏற்படுவதை தவிர்க்க விமானத்தில் இருந்த ஆக்சிஜன் முகக்கவசங்கள் விடுவிக்கப்பட்டன. பயணிகள் முகக்கவசங்களைஅணிந்து கொண்டதால், அவர்களுக்கு ஏற்பட இருந்த பெரும் பாதிப்பு தவிர்க்கப்பட்டது. இதையடுத்து விமானம் டைசுங் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.அங்கிருந்து விமானத்தில் பயணம் செய்த 17 பயணிகளுக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பிறகு யாருக்கும் பெரிய பாதிப்பு ஏற்படாத காரணத்தால் ஏற்படாத காரணத்தால் அனைவரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கொரியன் ஏர் சார்பில் பயணிகளிடம் மன்னிப்பு கோரப்பட்டது. மேலும், இந்த தொடர்பாக கொரியன் ஏர் சார்பில் பயணிகளிடம் மன்னிப்பு கோரப்பட்டது. மேலும், இந்த சம்பவத்தில் அனைத்து வகை விசாரணைக்கும் தயார் என்றும் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு தேவையான உதவிகளை வழங்கியுள்ளோம். அவர்களுக்கு தேவையான தங்கும் வசதி, உணவு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டன.