பூமிக்கு அதிக ஆபத்து விளைவிக்கக்கூடும் என்று என்று அஞ்சப்படும் விண்கல் ஒன்று பூமியைத் தாக்க 72% வாய்ப்புகள் இருபதாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த விண்கல் பூமியில் ஏற்படுத்தக்கூடிய பாதிப்பை தடுக்க இன்னும் நாம் தயாராகாவில்லை என்று நாசா எச்சரித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் நாசாவால் ஒருங்கிணைக்கப்பட்டு, மாரிலாந்தில் உள்ள ஜான் ஹாப்கின்ஸ் ஆய்வுகூடத்தில் நடத்தப்பட்ட, கிரகங்களின் பாதுகாப்பு தொடர்பான சோதனையில், பூமிக்கு விண்வெளியிலிருந்து ஏற்படக்கூடிய ஆபத்துகள் குறித்து ஆராய்ச்சி செய்யப்பட்டது. இந்த சோதனை தொடர்பான அறிக்கையை கடந்த ஜூன் 20 ஆம் தேதி நாசா வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, ‘உலகுக்கு வருங்காலங்களில் விண்கற்களால் அதிக ஆபத்து இருந்து வரும் நிலையில் அதிலிருந்து தற்காத்துக்கொள்ள நாம் தயாராக இருக்கிறோமா என்பதற்கு இந்த ஆராய்ச்சியில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இந்த ஆய்வில் இதுவரை மனிதர்களால் கண்டறியப்படாத விண்கலம் ஒன்று பூமியை நோக்கி நகர்வதாகவும் இன்னும் 14 வருடகங்களில் துல்லியமாக 2038 ஆம் ஆண்டு ஜூலை 12 ஆம் தேதி பூமியை தாக்கி அதிக சேதங்களை ஏற்படுத்த 72 சதவீதம் வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த விண்கலின் எடை, அளவு மற்றும் தன்மைகள் குறித்து ஆய்வில் தெரிந்துகொள்ள முடியவில்லை’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வானது நாசாவின் DART (Double Asteroid Redirection Test) எனப்படும் அதிநவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் நடத்தப்பட்ட முதல் ஆய்வாகும். விண்கற்களால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து பூமியைப் பாதுகாக்க உருவாக்கப்பட்ட தொழில்நுட்பமே DART. இதற்கிடையில், விண்கற்களை தொலைவில் இருந்து பார்க்க NEO Surveyor (Near-Earth Object Surveyor). எனப்படும் இன்பிராரெட் தொலைநோக்கியை நாசா உருவாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.