RON97 மற்றும் RON95 பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் சில்லறை விலைகள் ஜூன் 27 முதல் ஜூலை 3 வரை முறையே லிட்டருக்கு RM3.47, RM2.05 மற்றும் RM3.35 ஆக இருக்கும்.
தானியங்கி விலை நிர்ணய பொறிமுறையின் கீழ் (APM), பெட்ரோலியப் பொருட்களின் வாராந்திர சில்லறை விலையின் அடிப்படையில் விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன என்று, இன்று (ஜூன் 26) நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
உலகளாவிய ரீதியில் கச்சாய் எண்ணெய்யின் விலை போக்குகளை அரசாங்கம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது என்றும், அதன் மூலம் மக்களின் நலன் மற்றும் நல்வாழ்வை உறுதி செய்ய உரிய நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்குக் என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.