கோலாலம்பூர்:
கடந்த ஆண்டு SPM தேர்வு எழுதாத மொத்தம் 10,160 விண்ணப்பதாரர்களில் 399 பேர் மீண்டும் தேர்வை வெற்றிகரமாக எழுதுவதற்கு ‘வற்புறுத்தப்பட்டனர்’ என்று துணைக் கல்வி அமைச்சர் வோங் கா வோ கூறினார்.
கல்வி அமைச்சகத்தின் (KPM) ஊக்கம் மற்றும் விழிப்புணர்வு வழங்கல் மூலமும், பள்ளி மற்றும் பெற்றோர் ஆகியோரின் ஒத்துழைப்பின் விளைவாகவும் குறித்த மாணவர்களைக் கண்காணிக்கும் முயற்சிகளை மேற்கொண்டதாக, இன்று நாடாளுமன்றத்தில் ரோஸ்லான் ஹாஷிமின் (PN-கூலிம் பண்டார் பஹாரு) வாய்மொழி கேள்விக்கு துணை அமைச்சர் பதிலளித்தார்.
புள்ளிவிவரங்களின்படி, கல்வி அமைச்சின் கட்டுப்பாட்டுக்கு கீழ் உள்ள பள்ளிகளில் 8,676 பேர் SPM பரீட்சைக்கு வரவில்லை, அதேநேரம் 1,263 பேர் (தனியார் விண்ணப்பதாரர்கள்), 221 பேர் (அரசு மதப் பள்ளிகள், நாட்டுப்புற மதப் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் இருந்து விண்ணப்பித்தவர்கள்) ஆகியோர் அடங்குவதாக அவர் சொன்னார்.
இதுதவிர மொத்தம் 3,858 மாணவர்கள் பள்ளியை விட்டு இடைவிலகி உள்ளதாகவும் அவர் கவலை தெரிவித்தார்.