Offline
சகிப்புத்தன்மையும் மரியாதையும் எப்போதும் நமது தேசிய ஒற்றுமையின் முதுகெலும்பாகும் – மாமன்னர்
News
Published on 09/16/2024

மாமன்னர் தம்பதியர்  அனைத்து மலேசியர்களுக்கும் திங்கள்கிழமை (செப்டம்பர் 17) இனிய மலேசியா தின வாழ்த்துகளைத் தெரிவித்தனர். சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கந்தரின் அதிகாரபூர்வ முகநூல் பக்கத்தில் பதிவின் மூலம் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

சுல்தான் இப்ராஹிம் மற்றும் ராஜா சாரித் சோபியா ஆகியோர் மலேசியாவின் தொடர்ச்சியான பாதுகாப்பு, ஆசீர்வாதம் மற்றும் நீடித்த செழுமைக்காக பிரார்த்தனை செய்தனர். மதம், இனம் எதுவாக இருந்தாலும் சகிப்புத்தன்மையும் மரியாதையும் எப்போதும் நமது தேசிய ஒற்றுமையின் முதுகெலும்பாக இருந்து வருகிறது. நம்முடைய பல இன சமூகத்தின் ஒற்றுமை எனக்கு மிகவும் அர்த்தமுள்ள பரிசு என்பதை நான் தொடர்ந்து வலியுறுத்துகிறேன் என்று சுல்தான் இப்ராஹிம் கூறினார்.

மலேசியா உருவானதை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 16 அன்று மலேசியா தினம் கொண்டாடப்படுகிறது. தேசிய அளவிலான மலேசியா தினக் கொண்டாட்டம் சபாவின் கோத்த கினபாலுவில் உள்ள படாங் மெர்டேகாவில் திங்கள்கிழமை இரவு நடைபெறும்.

 

Comments