கோலாலம்பூர்:
கடந்த வாரம் முதல் கடுமையான மூட்டு வலியால் அவதிப்படும் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக், இன்று 1எம்டிபி வழக்கு விசாரணையை எதிர்கொள்வதற்கு நீதிமன்றத்திற்கு சக்கர நாற்காலியில் வந்தார்.
கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை 1எம்டிபி வழக்கு விசாரணைக்கு அவரால் வர முடியவில்லை. கடுமையான மூட்டு வலியால் பாதிக்கப்படடதால் கோலாலம்பூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டதன் தொடர்பில் 2 தினங்களுக்கு விசாரணைக்கு வர முடியாததற்கு அவர் மருத்துவ விடுப்பு கடிதத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார்.
முன்னதாக இன்று அவர் நீதிமன்ற விசாரணைக்கு சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்போடு சக்கர நாற்காலியில் நீதிமன்றம் வந்திருந்தார்.
நீதிமன்ற விசாரணையின் போது கைத்தடியின்றி மெல்ல தாங்கி தாங்கி நடந்தார்.
காலை மடக்க சிரமம் ஏற்பட்டிருப்பதால் அவர் குற்றவாளி கூண்டுக்கு வெளியில் காலை தளர்வாக வைத்தவாறு அமர அனுமதிக்கப்பட்டார்.