லங்காவி:
கடல் கொந்தளிப்பு மற்றும் பலத்த காற்றுடனான சீரற்ற காலநிலை காரணமாக லங்காவி – கோல கெடா இடையிலான 10 படகு சேவைகள் சனிக்கிழமை வரை ரத்து செய்யப்பட்டன.
மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்தில் காற்று வீசியதாலும், 3.5 மீட்டர் அலைகள் கொந்தளிப்பதாலும் இந்த வழித்தடத்திற்கான அனைத்து படகுச் செயல்பாடுகளும் தொடர்ந்து மூன்றாவது நாளாக ரத்து செய்யப்பட்டதாக கொன்சோர்ட்டியம் ஃபெர்ரி லைன் வெஞ்சர்ஸ் தலைமை நிர்வாகி கேப்டன் பஹாரின் பஹாரோம் தெரிவித்தார்.
“பயணிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பை கவனத்தில் கொண்டு, இன்றைய படகு செயல்பாடுகளை ரத்து செய்ய வேண்டியிருந்தது. 589 பயணிகளுடன் லங்காவியில் இருந்து கோல கெடாவிற்கு காலை 8.30 மணியளவில் சென்ற படகும் திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்று அவர் சொன்னார்.