அலோர் ஸ்டார்:
கெடாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று காலை 7.30 மணி நிலவரப்படி, அங்குள்ள ஐந்து மாவட்டங்களில் உள்ள 44 தற்காலிக நிவாரண மையங்களில் மொத்தம் 2,871 குடும்பங்களைச் சேர்ந்த 8,898 பேராக அதிகரித்துள்ளது.
இந்த எண்ணிக்கை நேற்று இரவு 2,728 குடும்பங்களைச் சேர்ந்த 8,514 பேராக பதிவாகியிருந்தது என்று சமூக நலத் துறையின் (JKM) தெரிவித்துள்ளது.
இதுவரை கோத்தா ஸ்டார், குபாங் பாசு, பெந்தோங் பண்டார் பாரு மற்றும் போக்கோக் சேனா ஆகிய ஐந்து மாவட்டங்களில் குறித்த 44 நிவாரண மையங்களும் செயலில் உள்ளது.
இதற்கிடையில், கோத்தா ஸ்டார் மாவட்டத்தில் உள்ள மூன்று ஆறுகள் இன்று காலை 7 மணி நிலவரப்படி அபாய அளவைத் தாண்டி தொடர்ந்து அதிகரித்து வருவதாக நீர்ப்பாசன மற்றும் வடிகால் திணைக்களத்தின் (JPS) Public Infobanjir இணையதளம் தெரிவித்துள்ளது.
TAR பாலத்தில் உள்ள சுங்கை அனாக் புக்கிட் மற்றும் தாமான் அமனில் உள்ள சுங்கை அனாக் புக்கிட் ஆகிய ஆறுகள் இதில் அடங்கும் என்றும் அது தெரிவித்துள்ளது .
அதேநேரம் குபாங் பாசு மாவட்டத்தில் உள்ள சுங்கை பாடாவும் அபாயக் கட்டத்தை கடந்துள்ளது என்றும் அது கூறியுள்ளது.