Offline
கெடா வெள்ளம்: இன்னமும் 243 பேர் அங்குள்ள மூன்று நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர்
News
Published on 09/28/2024

சாங்லூன்:

நேற்றிரவு ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 10 குடும்பங்களைச் சேர்ந்த 36 பேர் தங்குவதற்காக இங்குள்ள செக்கோலா மெனெங்கா கெபாங்சான் சாங்லூனில் ஒரு தற்காலிக நிவாரண மையம் திறக்கப்பட்டது.

வெள்ளத்தில் மூழ்கிய வீடுகளில் இருந்து பாதிக்கப்பட்ட மக்கள் வெளியேறிய பிறகு, இரவு 11.43 மணிக்கு குறித்த PPS திறக்கப்பட்டது என்று, குபாங் பாசு மாவட்ட குடிமைத் தற்காப்பு அதிகாரி கேப்டன் (PA) முகமட் அடெனின் சுஹைமி கூறினார்.

பாதிக்கப்பட்ட அனைவரும கம்போங் நங்மாவில் வசிப்பவர்கள் என்று அவர் மேலும் கூறினார்.

“மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை (ஜேபிபிஎம்), கெடா சமூக நலத் துறை (ஜேகேஎம்) மற்றும் பெங்குலு ஆகியோரும் பாதிக்கப்பட்டவர்களை வெளியேற்றும் நடவடிக்கையில் கலந்துகொண்டனர்,” என்று அவர் இன்று தொடர்புகொண்டபோது கூறினார்.

இதற்கிடையில், குபாங் பாசு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்தது, அங்கு ஏற்கனவே ஒரு நிவாரண மையம் இயங்கிவந்த நிலையில், அங்கு மேலும் இரண்டு பிபிஎஸ்கள் திறக்கப்பட்டன.

இன்று காலை 8 மணி நிலவரப்படி, மொத்தம் 59 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 243 பேர் கெடாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கெடா பேரிடர் தகவல் தளம் தெரிவித்துள்ளது.

Comments