Offline
கெடா வெள்ளம்: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,503 பேராக அதிகரிப்பு
News
Published on 10/10/2024

அலோர் ஸ்டார்:

இன்று காலை 8 மணி நிலவரப்படி, இங்குள்ள நான்கு மாவட்டங்களில் உள்ள மொத்தம் 23 தற்காலிக நிவாரண மையங்களில் 1,141 குடும்பங்களைச் சேர்ந்த 3,503 பேர் வெள்ளம் காரணாமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

நேற்றிரவு 924 குடும்பங்களைச் சேர்ந்த 2,771 பேருடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை சற்று அதிகரிப்பைக் காட்டுகிறது என்று, மலேசிய குடிமைத் தற்காப்புப் படையின் கெடா மாநில துணை இயக்குனர், மேஜர் முஹமட் சுஹைமி முஹமட் ஜெய்ன் கூறினார்.

மேலும் வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் மிகவும் அதிகமானோர் பாதிக்கப்பட்ட மாவட்டமாக குபாங் பாசு உள்ளது. இங்கு 459 குடும்பங்களைச் சேர்ந்த 1,324 பேராக உள்ளது. இவர்கள் அனைவரும் அங்குள்ள 9 நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர்.

இந்த மாவட்டத்தை அடுத்து, கோத்தா ஸ்டார் மாவட்டமும் (1,197 பேர்), அதற்கு அடுத்து போக்கோக் சேனாவும் (549 பேர்) உள்ளது.

Comments