Offline
அமெரிக்கர்களை கொல்லும் புலம்பெயர்ந்தோருக்கு மரண தண்டனை – டிரம்ப் அதிரடி
Published on 10/13/2024 18:07
News

வாஷிங்டன்,அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5ம் தேதி நடைபெற உள்ளது. இதில் ஜனநாயக கட்சி வேட்பாளராக தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிசும், குடியரசு கட்சி வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பும் களமிறங்கியுள்ளனர்.

தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இரு வேட்பாளர்களும் தீவிர பிரசாரம் மற்றும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கொலராடோ மாகாணம் அரோரா நகரில் நடந்த தேர்தல் பிரசார நிகழ்ச்சியில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் கலந்துகொண்டார்.

நிகழ்ச்சியில் டிரம்ப் பேசியதாவது,

சட்டவிரோதமாக நுழைந்த புலம்பெயர்ந்தோரால் அமெரிக்கா தற்போது உலகம் முழுவதும் ஆக்கிரமிக்கப்பட்ட அமெரிக்கா என அழைக்கப்படுகிறது.

சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் மிகவும் ஆபத்தானவர்கள். அமெரிக்காவில் அமெரிக்கர்கள், பாதுப்புப்படையினர், போலீசாரை கொலை செய்யும் புலம்பெயர்ந்தோருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

Comments