Offline
Menu
சென்னை புறநகர்ப் பகுதியில் ரயில் விபத்து: 20 பேர் காயம்
Published on 10/13/2024 18:24
News

சென்னை:

பயணிகளை ஏற்றிச்சென்ற “மைசூரு-டர்பாங்கா பாக்மதி” என்ற விரைவு ரயில் ஒன்று சென்னை புறநகர்ப் பகுதியில், தண்டவாளத்தில் நின்றுகொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதியதில் 20 பேர் காயமடைந்தனர்.

இந்தச் சம்பவம் இந்திய நேரப்படி நேற்று (அக்.11) இரவு 8.30 மணிக்கு சென்னையிலிருந்து ஏறத்தாழ 46 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கவரப்பேட்டையில் நிகழ்ந்தது. இதில் அந்த விரைவு ரயிலின் குறைந்தது 12 பெட்டிகள் தடம் புரண்டன.

சம்பவத்தின்போது விரைவு ரயில் மணிக்கு 75 கிலோமீட்டர் வேகத்தில் சென்றுகொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

விரைவு ரயில் பென்னேரி ரயில் நிலையத்தை இரவு 8.27 மணி அளவில் அடைந்ததாகவும், அதற்கு அடுத்துள்ள கவரப்பேட்டை நிலையத்துக்குச் செல்ல பச்சைக்கொடி காட்டப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது. பின்னர்

அது பிரதான தண்டவாளத்தில் செல்வதற்குப் பதிலாக, வேறொரு ரயில் பாதைக்குள் ரயில் நுழைந்து, அங்கு நின்றுகொண்டிருந்த சரக்கு ரயில் மீது அது மோதியது.

இருப்பினும் விரைவு ரயில் ஊழியர்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும் சரக்கு ரயிலின் ஒரு பெட்டி தீப்பிடித்துகொண்டதாகவும் அதிகாரிகள் கூறினர்.

தீயணைப்புப் படையினர் தீயை அணைத்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்த விபத்தில் உயிரிழப்பு ஏற்படவில்லை என்று அதிகாரிகள் செய்தி வெளியிட்டனர்.

 

Comments