Offline
இஸ்ரேல் – காசா போரில் சிக்கி 138 பத்திரிகையாளர்கள் பலி
News
Published on 10/15/2024

காசா:

இஸ்ரேல்- காசா இடையிலான போரில் இதுவரை 138 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டு இருப்பதாக சர்வதேச பத்திரிகையாளர் பெடரேஷன் (IFJ) தெரிவித்துள்ளது . இந்த சர்வதேச அமைப்பில் உலகம் முழுவதும் 150 நாடுகளில் 6 லட்சம் பத்திரிகையாளர்கள் உறுப்பினராக உள்ளனர்.

இந்த அமைப்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த 2023 அக்டோபர் மாதம் இஸ்ரேல் – காசா போர் துவங்கியது. ஓராண்டில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இதில் பாலஸ்தீனத்தை சேர்ந்த 128 பத்திரிகையாளர்கள், லெபனானை சேர்ந்த 5 பேர், இஸ்ரேலை சேர்ந்த 4 பேர் , சிரியாவை சேர்ந்த ஒருவர் என 138 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

குறிப்பாக இஸ்ரேல் தாக்குதலில் தான் அதிகம் பேர் பலியானதாக இந்த விவர அறிக்கை தெரிவிக்கிறது. இஸ்ரேலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பத்திரிகையாளர்கள் அமைப்பு, ஐ.நா., வரை கொண்டு சென்று இருக்கிறது. பலியான பத்திரிகையாளர்கள் குடும்பத்தினருக்கு நிதி உதவி வழங்கவும் ஏற்பாடு செய்து வருகிறது

Comments