டெஹ்ரான்: இஸ்ரேல் - ஈரான் இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டிருக்கும் நிலையில் அமெரிக்கா இஸ்ரேலுக்கு ’தாட்’ ஏவுகணை எதிர்ப்பு அமைப்புகளை வழங்கி உள்ளது. இந்த நிலையில் இஸ்ரேலுக்கு உதவும் நாடுகள் கடுமையான பாதிப்பை சந்திக்கும் எனவும், தங்களது வான் பரப்பை இஸ்ரேல் பயன்படுத்த அனுமதிக்கும் நாடுகள் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என ஈரான் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நடந்த பேஜர் தாக்குதலில் ஏரளாமனோர் பலியான நிலையில், 2500க்கும் மேற்பட்டோர் பலியாயினர். இந்நிலையில் இஸ்ரேல் தான் இந்த தாக்குதலுக்கு காரணம் என ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் ஹிஸ்புல்லா மீது தாக்குதலை தொடங்கியது. போர் விமானங்கள், ராக்கெட் லாஞ்சர்கள் உள்ளிட்டவை மூலம் அடுத்தடுத்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில் 1000-க்கும் மேற்பட்டோர் பலியானதாக கூறப்படுகிறது. இதற்கிடையே கடந்த சில தினங்களுக்கு லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லாவை குறி வைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் அவர் உயிரிழந்ததாக இஸ்ரேல் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பின் தலைமையகத்தை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் கடந்த வியாழக்கிழமை முதல் தொடர்ந்து வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது. நூற்றுக்கணக்கான குண்டுகள், ராக்கெட்டுகள் மூலம் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தளபதிகள் கொல்லப்பட்டதாக கூறப்பட்டது. மேலும், ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவரான ஹசன் நஸ்ரல்லாவின் மகளும் கொல்லப்பட்டார். அதனை ஹிஸ்புல்லாவும் உறுதி செய்துள்ளது. ஹசன் நஸ்ரலாவின் மரணம் மத்திய கிழக்கு பகுதியில் பதட்டமான நிலையை ஏற்படுத்தியிருக்கிறது. இஸ்ரேல் தாக்குதலில் சிரியாவில் ஈரான் ராணுவ தளபதியான அப்பாஸ் உயிரிழந்த நிலையில் இஸ்ரேலை பழிவாங்குவோம் என ஈரான் அறிவித்தது.