Offline
தாய்லாந்துக்கு கடத்த முயன்ற 590 போலிக் கைப்பைகளுடன் இருவர் கைது
Published on 10/15/2024 11:19
News

கோத்தா பாரு:

பாசீர் மாஸ் அருகே போலீசார் மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கையில், அண்டை நாடுகளுக்கு கடத்த முயன்றதாகக் கருதப்படும் சுமார் RM88,500 மதிப்புள்ள பல்வேறு பிராண்டுகள் கொண்ட 590 போலி கைப்பைகளை நேற்று முன்தினம் போலீசார் கைப்பற்றியதுடன், அவற்றை வைத்திருந்த இருவரையும் கைது செய்தனர்.

மாலை 6.20 மணியளவில் பாசீர் மாஸில் உள்ள சாபாங் எம்பாட் சலாம் என்ற இடத்தில் இருந்த சாலைத் தடுப்பில் தடுத்து வைக்கப்பட்டிருந்த லோரியை சோதனை செய்த பின்னர், குறித்த பைகள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொது நடவடிக்கைப் படையின் தென்கிழக்கு படைப்பிரிவின் தலைவர் டத்தோ நிக் ரோஸ் அஜான் நிக் அப்துல் ஹமிட் கூறினார்.

தாய்லாந்திலிருந்து கடத்தப்பட்டதாக நம்பப்படும் குறித்த போலிக் கைப்பைகளில் அவற்றை இறக்குமதி செய்வதற்கான சரியான ஆவணங்கள் சந்தேக நபர்களிடம் இல்லை என்று அவர் மேலும் கூறினார்.

அதனைத் தொடர்ந்து சந்தேக நபர்களான ஓட்டுநரும் அவரது உதவியாளரும் கைது செய்யப்பட்டனர் என்று அவர் சொன்னார்.

Comments