சென்னை: தாம்பரம் அருகே குடியிருப்பு பகுதிகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒருவர் எக்ஸ் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு இருந்தார். அதில் துணை முதல்வர் உதயநிதியை டேக் செய்திருந்தார். இதையடுத்து உடனடி நடவடிக்கைக்கு உதயநிதி ஸ்டாலின் உத்தரவிட்டதை தொடர்ந்து இரவோடு இரவாக மழை நீர் வெளியேற்றும் பணி நடந்தது. அதுமட்டுமின்றி இன்று நேரில் உதயநிதி ஸ்டாலின் அந்த ஸ்பாட்டுக்கு சென்று ஆய்வு செய்து நிரந்தர தீர்வுக்கு உத்தரவிட்டது அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நேற்று முன்தினம் முதல் கனமழை பெய்ய தொடங்கியது. நேற்றும் பல இடங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது. இன்று தான் மழை இன்றி உள்ளது. குறிப்பாக சென்னை மற்றும் அதனை சுற்றிய இடங்களில் பெய்த கனமழையால் குடியிருப்புகளை மழை வெள்ளம் சூழ்ந்தது.