Offline
ஓடிடியில் வெளியாகும் `லப்பர் பந்து’ ஆனால் இந்தியாவில் பார்க்க முடியாது
Published on 10/17/2024 15:24
News

தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான படம் லப்பர் பந்து. வெளியானது முதல் ஒவ்வொரு வாரமும் அதிக திரைகளில் ஓடிக் கொண்டிருக்கும் லப்பர் பந்து திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இதன் காரணமாக லப்பர் பந்து திரைப்படம் மூன்றாவது வாரம் கடந்தும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருகிறது. திரைப்படம் இதுவரை 50 கோடி ரூபாய் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், லப்பர் பந்து திரைப்படத்தின் ஓ.டி.டி. ரிலீஸ் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி திரையரங்குகளில் வெற்றிக்கரமாக ஓடிக் கொண்டிருக்கும் லப்பர் பந்து திரைப்படம் வருகிற 18 ஆம் தேதி முதல் சிம்ப்லி சவுத் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. ஆனால் இது இந்தியாவை தவிர உள்ள மற்ற மாநிலங்களில் மட்டுமே ஓடிடி-யில் வெளியாகவுள்ளது என தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் எப்பொழுது ஓடிடியில் வரும் என தகவல் வெளியாகவில்லை.

Comments