Offline
இந்தோனேசியாவின் எட்டாவது அதிபராக பதவியேற்ற பிராபோவோக்கு பேரரசர் தம்பதிகள் வாழ்த்து
Published on 10/21/2024 01:03
News

கோலாலம்பூர்:

இந்தோனேசியாவின் எட்டாவது அதிபராக இன்று பதவியேற்றுள்ள பிரபோவோ சுபியாண்டோவுக்கு மாமன்னர் மாட்சிமை பொருந்திய சுல்தான் இப்ராஹிம் மற்றும் பேரரசியார் ராஜா ஜரித் சோபியா ஆகியோர் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

இந்த வாழ்த்தில் பேரரசர் சுல்தான் இப்ராகிம் மற்றும் பிரபோவோ கைகுலுக்கிக்கொண்ட புகைப்படம் அடங்கிய சிறப்பு பதிவு மூலம் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கந்தரின் முகநூல் பக்கத்தில் இந்த வாழ்த்துச் செய்தி பகிரப்பட்டது.

மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் உட்பட பல வெளிநாட்டுத் தலைவர்கள் மற்றும் சிறப்புப் பிரதிநிதிகள் கலந்துகொண்ட இந்த பதவியேற்பு விழாவில், 73 வயதான பிரபோவோ, இந்தோனேசிய நாடாளுமன்றத்தின் 2024-2029ஆம் ஆண்டுக்கான அதிபராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Comments