Offline
பயிற்சியின் போது காணாமல் போன ஐந்து படகு வீரர்கள் சடலமாக மீட்பு
News
Published on 10/21/2024

சிபு: கூச்சிங்கில் சரவாக் ஆற்றில் நடந்த ரெகாட்டா பயிற்சி விபத்தில் காணாமல் போன ஐந்து படகு வீரர்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 20) காலை 6.16 மணிக்கு இரண்டு உடல்களும், மற்றவை காலை 6.40, 7.07 மற்றும் 7.09 மணிக்கும் கண்டெடுக்கப்பட்டதாக தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தெரிவித்துள்ளது.

பலியானவர்கள் முகமது இக்மல் சமாயில் 34, மஜூரி மஹரூப் 32, முகமட் அஃபிக் இஸ்யாமுதின் அசாரி 26, முகமது கைருல் பிடின் 26,  முஹம்மது கைருல் ஹிஷாம் கஸ்தூரி 23 என அடையாளம் காணப்பட்டனர். தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையில் துறை பணியாளர்கள், காவல்துறை, சரவாக் நதிகள் வாரியம், குடிமைத் தற்காப்புப் படை மற்றும் கடல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

வெள்ளிக்கிழமை (அக். 18) பயிற்சியின் போது 15 துடுப்பு வீரர்களை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்தது. அவர்களில் பத்து பேர் பாதுகாப்பாக நீந்தி கரை சேர்ந்தனர். மேலும் ஐந்து பேர் பிரீமியர் துறையைச் சேர்ந்த சரவாக் பாதுகாப்பு மற்றும் அமலாக்கப் பிரிவின் (யுகேபிஎஸ்) உறுப்பினர்கள் காணாமல் போயினர். பிற்பகல் 3.47 மணியளவில் எதிர்திசையில் இருந்து வந்த மீன்பிடி படகு ஒன்று அலையை உருவாக்கி துடுப்பு வீரர்களின் படகில் மோதியதால்  அவ்விபத்து நடந்தது.

Comments