மலேசிய இஸ்லாமிய வங்கியின் தந்தை என அழைக்கப்படும் டத்தோ டாக்டர் அப்துல் ஹலீம் இஸ்மாயில் ஞாயிற்றுக்கிழமை (அக். 20) காலை காலமானார். பேங்க் இஸ்லாம் மலேசியா பெர்ஹாட் அதிகாரப்பூர்வ முகநூலில், மலேசியாவில் இஸ்லாமிய நிதிக்கு அடித்தளம் அமைத்த தொலைநோக்கு தலைவரான பேங்க் இஸ்லாமின் முதல் நிர்வாக இயக்குனர் அப்துல் ஹலீம் என்று கூறி, இந்த செய்தி உறுதிப்படுத்தப்பட்டது.
பேங்க் இஸ்லாமின் பயணத்தை வடிவமைப்பதில் அப்துல் ஹலீமின் அர்ப்பணிப்பு மற்றும் முன்னோடியான மனப்பான்மை முக்கிய பங்கு வகித்ததாகவும், மலேசியாவின் இஸ்லாமிய நிதித்துறையின் வளர்ச்சியில் நீடித்த தாக்கத்தை அவர் ஏற்படுத்தியதாகவும் வங்கி கூறியது.