புவனேஸ்வர்:
ஒடிசா மாநிலத்தில் அக்.25ம் தேதி காலை டாணா புயல் தாக்கும் என்று இந்திய வானிலை மையத்தின் கணிப்பு காரணமாக காய்கறிகளின் விலை தாறுமாறாக அதிகரித்துள்ளது.
ஒடிசாவின் மிகப்பெரிய காய்கறி சந்தைகளில் ஒன்றாக உள்ள, கட்டாக்கின் சத்ரா சந்தையில், உருளைக்கிழங்கு விலை இன்று கிலோ ரூ.30ல் இருந்து ரூ.50 ஆக அதிகரித்துள்ளது. வெங்காயத்தின் விலையும் சந்தையில் கிலோ ரூ.40ல் இருந்து ரூ.60 ஆக அதிகரித்துள்ளது.
புவனேஸ்வரில் உள்ள உள்ளூர் சந்தைகளில் தக்காளி ரூ.80 முதல் 100 வரை விற்கப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
கத்தரிக்காய், வெண்டைக்காய், காலிபிளவர் போன்ற காய்கறிகளின் விலையும் கிலோவுக்கு 10 முதல் 20 ரூபாய் வரை அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.