ஜோகூர் பாரு: தாமான் டான் ஸ்ரீ யாகோப்பில் ஜாலான் புத்ரா 18இல் உள்ள மூன்று இரட்டை அடுக்கு மாடி வீடுகள் புதன்கிழமை (அக். 23) அதிகாலையில் தீயில் எரிந்து நாசமானது. ஜோகூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர், சம்பவம் குறித்து தங்களுக்கு அதிகாலை 3.04 மணிக்கு பேரிடர் அழைப்பு வந்ததாகவும், உடனடியாக லார்கின் மற்றும் ஸ்குடாய் தீயணைப்பு நிலையங்களில் இருந்து 21 தீயணைப்பு வீரர்களை அனுப்பியதாகவும் தெரிவித்தனர்.
ஆபரேஷன் கமாண்டர் முகமட் சுஹைமி அப்துல் ஜமாலின் கூற்றுப்படி, தீவிபத்தில் அடுத்தடுத்து இருந்த மூன்று வீடுகள் சேதமடைந்தன. நடுத்தர வீட்டின் தாழ்வாரப் பகுதியிலிருந்து தீ, அடுத்த இரண்டு வீடுகளுக்கும் பரவுவதற்கு முன் ஆரம்பித்ததாக நம்பப்படுகிறது. மூன்று வீடுகளும் வெவ்வேறு நிலைகளில் சேதம் அடைந்தன.
முதல் வீடு 70% எரிந்தது, இரண்டாவது மற்றும் மூன்றாவது வீடுகள் முறையே 8% மற்றும் 4% சேதமடைந்துள்ளன என்று அவர் மேலும் கூறினார். தீயினால் இரண்டு கார்கள் மற்றும் நான்கு மோட்டார் சைக்கிள்களுக்கு சில கடுமையான சேதங்கள் ஏற்பட்டதாகவும் ஆனால் சம்பவத்தின் போது யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் முகமட் சுஹைமி மேலும் கூறினார்.