Offline
Menu
பேராக்கில் வெள்ளம் சீரடைகிறது- 137 பேர் மட்டுமே நிவாரண மையங்களில் தஞ்சம்
Published on 10/25/2024 00:59
News

ஈப்போ:

பேராக்கில் வெள்ள நிலைமை தொடர்ந்து மேம்பட்டு வருகிறது, ஹிலீர் பேராக் மற்றும் தென் பேராக் மாவட்டங்களில் உள்ள மூன்று தற்காலிக நிவாரண மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை இன்று காலை மேலும் குறைந்துள்ளது.

நேற்று இரவு நிவாரண மையங்களில் 38 குடும்பங்களைச் சேர்ந்த 146 பேர் இருந்த நிலையில், இன்று காலை 36 குடும்பங்களைச் சேர்ந்த 137 பேர் தங்கியுள்ளனர் என்று, பேராக் மாநில பேரிடர் மேலாண்மைக் குழு செயலகம் தெரிவித்துள்ளது.

 

Comments