ஈப்போ:
இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் பள்ளி மாணவர்களை உள்ளடக்கிய மொத்தம் 779 விபத்துக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதே காலகட்டத்தில் பள்ளி மாணவர்கள் சம்பந்தப்பட்ட மொத்தம் 4,043 சாலை விபத்து வழக்குகள் நாடுமுழுவதும் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று, புக்கிட் அமான் போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத் துறை (JSPT) இயக்குநர் டத்தோஸ்ரீ முகமட் யூஸ்ரி ஹாசன் பஸ்ரி கூறினார்.
இந்த விபத்துகளின் அதிகரிப்பு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமின் கவனத்தை ஈர்த்துள்ளதாகவும், இது மிகவும் கவலையளிப்பதாகவும் அவர் கூறினார்.
மற்ற வாகனங்களுடன் ஒப்பிடும்போது சாலை விபத்துக்களில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களே. எனவே இதனை தடுப்பதில் அதிக கவனம் செலுத்தி, சிறப்பு சாலை விபத்து நடவடிக்கைகளைத் தொடங்குவதன் மூலம் (பிரதமரின்) கவலையை நிவர்த்தி செய்ய நாங்கள் முயல்கிறோம்,” என்று அவர் கூறினார்.