Offline
எருமை மாட்டின் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் தொழிற்சாலை ஊழியர் பலி
Published on 10/25/2024 01:04
News

தம்பின்:

கம்போங் ஸ்ரீ ரெபாவுக்கு அருகில் உள்ள ஜாலான் கம்போங் கோலா பிலாவின் 5 ஆவது கிலோமீட்டரில், நேற்று மோட்டார் சைக்கிள் எருமை மீது மோதியதில் 20 வயது தொழிற்சாலை ஊழியர் ஒருவர் உயிரிழந்தார்.

இரவு 8 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தில், யமஹா Y15ZR வகை மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற அந்த ஆடவர், மோதலின் விளைவாக தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக தம்பின் மாவட்ட காவல்துறைத் தலைவர் சுப்ரிண்டன்ட் அமிருடியன் சரிமான் தெரிவித்தார்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த பாதிக்கப்பட்டவர், கம்போங் பெரம்பையில் உள்ள தனது வீட்டிலிருந்து மலாக்காவில் உள்ள ஒரு தொழிற்சாலைக்குச் சென்று கொண்டிருந்தபோது, விபத்து ஏற்பட்டது என்பது விசாரணையில் தெரியவந்தது.

“பாதிக்கப்பட்டவர் தனது பாதையில் திடீரென வந்த எருமையைத் தவிர்க்க முடியாமல் போனதால், மோட்டார் சைக்கிள் அதன் மீது மோதியது,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

 

Comments