கோலாலம்பூர்,
KK SUPER MART. நிறுவனத்திற்கு, ஆசியாவின் மிகச் சிறந்த நிறுவன விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டிருக்கிறது. “The Great Asia Outstanding Corporation Award” தி கிரேட் ஆசிய அவுட்ஸ்டாண்டிங் கார்ப்பரேஷன் அவார்ட் என்ற அந்த விருதுக்கு அங்கீகரிக்கப்பட்டதன் மூலம், வணிகத் துறையில் தமது அசாதாரண வெற்றியை மீண்டும் ஒரு முறை பதவுச் செய்திருக்கிறது KK SUPER MART.
அண்மையில் தலைநகரில் உள்ள ராயல் சோழன் தங்கும் விடுதியில் நடைபெற்ற சிறப்பு விழாவில் துணைப் பிரதமரும் எரிசக்திமாற்றம்,நீர் உருமாற்ற துறை அமைச்சருமான டத்தோஸ்ரீ ஹாஜி ஃபதிலா ஹாஜி யூசோப், KK SUPER MART நிறுவனரும் தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் கே.கே.சாய்க்கு அந்த விருதை வழங்கி கௌரவித்தார். விமரிசையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அந்த விருதளிப்பு விழாவிற்கு பினாங்கு மாநில ஆளுநர் துன் டத்தோ ஸ்ரீ உத்தாமா அமாட் ஃபுஸியும் சிறப்பு வருகை புரிநதிருந்தார்.
KK SUPER MART டின் சாதனைகளுக்கு ஒரு மைல் கல்லாக இந்த அங்கீகாரம் அமைந்திருக்கிறது. மலேசியாவில் மட்டுமன்றி வட்டார, அனைத்துலக ரீதியிலும் KK SUPER MART சில்லறை வர்த்தகத்தில் முன்னணியில் அடையாளப்படுத்தும் சிறந்ததொரு களமாக இந்த விருதளிப்பு அமைந்திருக்கிறது.
இந்த அங்கீகாரத்தைக் KK SUPER MART பெற்றிருப்பது ஒரு தனிமனிதச் சாதனையல்ல. KK SUPER MART நிறுவனத்தின் ஒட்டு மொத்த பணிக்குழுவின் அடைவுநிலையாகும் இது. KK SUPER MART குழுமத்தினர் ஓயாமால் நிறுவன வெற்றிக்காக அரும்பாடு படுகிறார்கள். அவர்களின் அர்ப்பணிப்பும் நிறுவனத்தின் வெற்றியில் அவர்கள் வெளிப்படுத்தும் அயரா உழைப்பும் இந்தச் சாதனைக்கு அடித்தளமாக விளங்குகிறது என்று டத்தோஸ்ரீ டாக்டர் கே.கே.சாய் குறிப்பிட்டார்.
பலதரப்பட்ட இனங்கள், கலாசாரங்கள், மதங்களைக் கொண்ட மலேசியாவின் தனித்துவமான தன்மையே தமது இந்த அடைவுநிலைக்கு மிகப் பெரிய காரணமாக அமைந்திருக்கிறது என்று ஒரு மலேசியராக இந்த வெற்றியைத் தாம் உன்னதமாக உணரும் தருணத்தை ஏற்படுத்தி தந்துள்ளது என்று அவர் மேலும் கூறினார். மலேசியர்களின் ஒற்றுமமையும் பன்முகத் தன்மையும் நமது இணைந்த வெற்றிக்கு உறுதுணையான சந்தர்ப்பத்தை நல்குகிறது என்றார் அவர்.