Offline
கடலில் படகு கவிழ்ந்து விபத்து: 50 பேர் பலி
Published on 10/26/2024 23:41
News

போர்ட்-ஓ-பிரின்ஸ்,கரீபியன் தீவு நாடான ஹைதியில் கடந்த 2021-ம் ஆண்டு அதிபர் ஜோவெனல் மொய்ஸ் படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து, அந்நாட்டில் அரசியல் நிலைத்தன்மையின்றி ஆயுத கும்பல்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது.

ஆயுத கும்பலின் வன்முறை பல மடங்கு அதிகரித்துள்ளது. மேலும் தலைநகர் போர்ட்-ஓ-பிரின்ஸ் உள்ளிட்ட பல இடங்களை ஆயுத கும்பல் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.

இந்தநிலையில் அங்குள்ள அர்காஹே நகர கடற்பகுதியில் ஆயுத கும்பல் ஒரு படகில் சென்றனர். இவர்கள் அருகில் உள்ள நகரங்களில் தாக்குதல் நடத்துவதற்காக வெடிமருந்துகளை ஏற்றிக் கொண்டு சென்றனர். இதுகுறித்து தகவலறிந்த போலீஸார் அங்கு விரைந்து சென்று அவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதில் இருந்து தப்பிக்க வேகமாக சென்றபோது அங்குள்ள ஒரு பாறை மீது மோதி படகு கவிழ்ந்தது. இந்த சம்பவத்தில் 50 பேர் உயிரிழந்தனர்.

Comments