Offline
சீனப் பிரஜைகளை கடத்தி பணம் கேட்ட குற்றச்சாட்டில் ஐவர் கைது!
Published on 10/27/2024 00:00
News

கிள்ளான்:

சீனப் பிரஜைகளை கடத்தி பணம் கேட்ட ஐவரை போலீசார் கைது செய்துள்ளதாக சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ ஹுசைன் ஒமர் கான் தெரிவித்துள்ளது.

கடந்த அக்டோபர் 18ஆம் தேதி புத்ராஜெயா மெக்ஸ் நெடுஞ்சாலையின் டோல் சாவடியில் சம்பந்தப்பட்ட ஆடவர் கடத்தப்பட்டடார் என்றும், பாதிக்கப்பட்டவர் சீனாவுக்குத் திரும்புவதற்காக விமான நிலையத்திற்குச் சென்று கொண்டிருந்த போது, குறித்த சம்பவம் நிகழ்ந்ததாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்ததாக அவர் கூறினார்.

குறித்த சீனப்பிரஜைகள் கடத்தல் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு சீன ஆடவர்கள், வரும் அக்டோபர் 28ஆம் தேதி வரை தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றார் அவர்.

இந்நிலையில் கைதுசெய்யப்பட்ட உள்ளூர் ஆடவர் ஒருவர் அக்டோபர் 29ஆம் தேதி வரை தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.

 

Comments