கேகே சூப்பர் மார்ட் ஒரு மினி மலேசியா என்றால் அது மிகையாகாது என்று அதன் ரிமையாளர் டத்தோஸ்ரீ டாக்டர் கேகே சாய் நேற்றுத் தெரிவித்தார். கேகே சூப்பர் மார்ட் தலைமையகத்தில் நேற்று பணியாளர்களுக்கு தீபாவளி அன்பளிப்பு வழங்கிய நிகழ்ச்சியில் அவர் பேசினார்.
எங்கள் நிறுவனத்தில் 5,300க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். அதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்தியர்கள் என்பதை இவ்வேளையில் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கேகே சூப்பர் மார்ட் மினி மலேசியா என நான் சொல்வதற்குக் காரணம் அனைத்து இனத்தவர்களும் எங்கள் நிறுவனத்தில் பணியாற்றுகின்றனர் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். கேகே சூப்பர் மார்ட் நிறுவனத்தின் சமூகக் கடப்பாடு வழி தீபாவளிக்கு மட்டுமல்லாமல் சீனப் புத்தாண்டு, ஹரிராயா ஆகிய பெருநாட்களுக்கு அன்பளிப்புகளை வழங்கி வருகிறோம் என்று அவர் சொன்னார்.
கடந்த வாரம் தாமான் மெலாவத்தி தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டுப் போட்டியை நடத்தி பரிசுகளையும் பள்ளி உபகரணங்களையும் வழங்கினோம். கேகே சூப்பர் மார்டில் வேலை வாய்ப்புகளை வழங்கி வருகிறோம் குறிப்பாக உடல்பேறு குறைந்தவர்கள் மற்றும் தோட்டப்புறங்களில் இருக்கும் வசதி குறைந்த இந்தியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று டத்தோஸ்ரீ டாக்டர் கேகே சாய் மேலும் கூறினார்.